search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காள தேசம்"

    • வங்காள தேசத்தில் நாளை 12 வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது
    • அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

    வங்க தேசத்தில் நாளை 12 வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 350 நாடாளுமன்ற தொகுதிகளில் 50 தொகுதிகள் அரசால் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 300 தொகுதிகளுக்கு நாளை(ஜன.7) தேர்தல் நடைபெறுகிறது

    90 பெண்கள், 79 சிறுபான்மையர் உட்பட 1,970 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். ஆளும் கட்சியான அவானி லீக் கட்சி சார்பில் 266 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியான ஜாட்டியா கட்சி 265 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த தேர்தல் ஆளும் கட்சியான அவானி லீக் கட்சிக்கும், எதிர்கட்சியான ஜாட்டியா கட்சிக்கும் இடையேயான போட்டியாக கருதப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. தற்போது செயல்பட்டு வரும் அரசின் தலைமையில் தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக வங்க தேசத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால், கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத புத்த மதம்-இந்து மதம்-கிறிஸ்துவ மதத்தின் ஐக்கிய கூட்டமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வங்க தேசத்தின் தலைமை தேர்தல் அதிகாரி காஜி ஹபிபுல் அவால், நம்பகத்தன்மை நிறைந்த தேர்தலில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த தேர்தல் தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் கண்காணிக்கப்படுகிறது. தேர்தல் காலை 8 மணிக்கு தொடங்கி, வரிசையில் நிற்பவர்கள் வாக்களிக்கும் வரை  நடைபெரும் என தெரிவித்தார். மேலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெங்கு வைரஸ், ஏடிஸ் (Aedes) எனும் கொசு வகை மூலம் பரவுகிறது
    • குணமடைந்தவர்களுக்கு மீண்டும் இந்நோய் வந்தால் உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கும்

    பருவநிலை மாற்றங்களினால் பல நாடுகளில் அதிக வெப்பம் மற்றும் சீரற்ற மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இது கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு சாதகமான சூழ்நிலை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அதிக வெப்பம் மற்றும் அதிக மழைப்பொழிவு தோன்றும் நாடுகளில், கொசுக்களின் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது.

    டெங்கு வைரஸ், ஏடிஸ் (Aedes) எனும் கொசு வகை மூலம் பரவுகிறது.

    1960களிலிருந்தே இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம், ஒவ்வொரு வருடமும் டெங்கு காய்ச்சலில் மக்களை இழந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூலையிலிருந்து செப்டம்பர் மாதம் வரை இந்த காய்ச்சலில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அந்நாட்டில் அதிகமாக இருக்கும். 2000 தொடக்கத்திலிருந்து டெங்கு பரவலும் உயிரிழப்புக்களும் அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. சமீப சில வருடங்களாக குளிர் காலங்களிலும் அந்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    அந்நாட்டு பொது சுகாதார இயக்குனரகம், இவ்வருடம் ஒரு லட்சம் பேருக்கும் மேல் அங்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 1006 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. உயிரிழந்தவர்களில் 112 பேர் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என்பதும் பிறந்த குழந்தைகளும்  அதில் அடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஒரு முறை டெங்கு காய்ச்சல் வந்து சிகிச்சை பெற்று குணமானவர்களுக்கு மீண்டும் இக்காய்ச்சல் வந்தால் உயிரிழக்கும் அபாயம் அதிகம் என வங்காள தேச இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    வங்காள தேசத்தில், சென்ற வருடம், ஆண்டு முழுவதிற்குமான எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சலுக்கு 281 பேர் பலியாகியிருந்தனர். இவ்வருடம் முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே உயிர் பலி ஆயிரத்தை தாண்டி விட்டது.

    அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள டெங்கு வார்டுகள் நிரம்பி வழிகிறது. வார்டுகளில் கொசு வலைகளுக்கு அடியில் காய்ச்சலுடன் இருக்கும் நோயாளிகளும், அவர்களுக்கு அருகே கவலையுடன் நிற்கும் உறவினர்களையும் காண்பது நாளுக்கு நாள் அதிகரிப்பதால் வங்காள தேச அரசாங்கம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக போராடி வருகிறது.

    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    • அப்ரிடி வீசிய முதல் ஓவரை நைம் மெய்டன் செய்தார்.

    லாகூர்:

    6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூப்பர் 4 சுற்று போட்டிகளின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணி மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக நைம் - ஹசன் மிர்ஷா களமிறங்கினர். அப்ரிடி வீசிய முதல் ஓவரை நைம் மெய்டன் செய்தார். அடுத்த ஓவரை நசீம் ஷா வீசினார். இவர் வீசிய முதல் பந்தில் ஹசன் மிர்ஷா டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து நைம் மற்றும் தாஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது ஓவரை அப்ரிடி வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் லிட்டன் தாஸ் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நைம் 7-வது ஓவரில் ஹரிஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    10-வது ஓவரின் முதல் பந்தில் தௌஹித் ஹிரிடோய் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வங்காளதேசம் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட்டுகளையும், அப்ரிடி, நசீம் ஷா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

    மியான்மரிலிருந்து வங்காள தேசத்துக்கு குடியேறி உள்ள ரோஹிங்கியா அகதிகளை பதிவு செய்யும் பணியை ஐ.நா. மற்றும் வங்காளதேச அரசு தொடங்கி உள்ளது. #Rohingyarefugees
    டாக்கா:

    மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து வங்காளதேசத்திற்கு தப்பிச் செல்கின்றனர்.

    வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ள  7 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா இன மக்கள் அங்குள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், நோஹிங்கியா அகதிகளை பதிவு செய்யும் பணியை ஐ.நா. வின் அகதிகள் உயர்மட்டக் குழுவுடன் இணைந்து வங்காளதேச அரசு இந்த வாரம் தொடங்கியுள்ளது. இது வங்காளதேச முகாம்களில் உள்ள அகதிகளின் தகவல்களை சேகரித்து வைப்பதற்காக இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த தகவல்கள் நவம்பர் மாதத்துக்குள் பதிவு செய்து முடிக்கப்படும். இந்த தகவல்களில், அகதிகளின் குடும்பம், பிறப்பு குறித்த தகவல்கள் அடங்கியிருக்கும். இது நாடு திரும்புவதற்கு உதவியாக இருக்கும். இதற்காக அகதிகளின் கைரேகை, கண் விழிகள் மற்றும் மற்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தகவல்கள் கொடுத்த அகதிகளுக்கு ஐ.நா. மற்றும் வங்காளதேச அரசின் லோகோ அடங்கிய அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இவை அகதிகளை பல பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க உதவியாக இருக்கும். #Rohingyarefugees 
    ×